சுடச்சுட

  

  அங்கீகரிக்கப்பட்ட சங்க பட்டியல்: மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சகம் கடிதம்

  By dn  |   Published on : 24th January 2013 11:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்களின் பட்டியலைத் தருமாறு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

  இது தொடர்பான விவரங்களை வரும் பிப்ரவரி 5-ம் தேதிக்கு முன்னதாக தருமாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

  அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்கள், அதன் நிர்வாகிகள், சங்கத்தின் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களையும் கேட்டுள்ளது. இதேபோல் மாநில ஒலிம்பிக் சங்கங்களின் முகவரி உள்ளிட்ட விவரங்களையும் கேட்டுள்ளது.

  விளையாட்டை மேம்படுத்துவதில் மத்திய விளையாட்டு அமைச்சகம், நாட்டில் உள்ள தேசிய விளையாட்டு சம்மேளனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. விளையாட்டை மேம்படுத்துவதற்கான தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் செயல்பட்டு வருகின்றன.

  இந்தியாவில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்காகவும், பல்வேறு நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளுக்கு இந்திய வீரர்களை அனுப்புவதற்காகவும், விளையாட்டு வீரர்களின் பயிற்சி, அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவது உள்ளிட்டவற்றுக்காகவும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சகம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

  மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் 53 தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai