Enable Javscript for better performance
இலங்கைக்கு எதிரான ஆட்டம்: ஆஸ்திரேலியா வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    இலங்கைக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

    இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது.

    பின்னர் பேட் செய்த இலங்கை அணி 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

    138 ரன்கள் எடுத்த ஹியூக்ஸ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது ஆஸ்திரேலியா.

    5 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் தலா இரு வெற்றிகளைப் பெற்றன. 4-வது ஒருநாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai