சுடச்சுட

  

  உலகக் கோப்பை கால்பந்து: இந்தியாவில் நடத்த ஃபிபா பரிசீலனை

  By dn  |   Published on : 24th January 2013 04:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எதிர்வரும் 2017-ம் ஆண்டு நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்துவது குறித்து பரிசீலிப்பதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிபா) தெரிவித்துள்ளது.

  இது தொடர்பாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அளித்த கடிதத்தை ஃபிபா ஏற்றது. மேலும் போட்டியை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க இந்திய கால்பந்து சம்மேளனத் தலைவர் பிரஃபுல் படேல், ஃபிபா அதிகாரிகளை புதன்கிழமை சந்தித்தார்.

  இந்த சந்திப்பு திருப்திகரமாக இருந்ததாகவும், இந்திய அரசின் கடிதத்தை பரிசீலிப்பதாக ஃபிபா கூறியதாகவும் இந்திய கால்பந்து சம்மேளனம் தெரிவித்தது. இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பளிக்கப்படும் என்று நம்புவதாக இந்திய கால்பந்து சம்மேளன செயலர் குஷால் தாஸ் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai