சுடச்சுட

  

  வாழ்க்கையில் எந்த முயற்சியானாலும் கடின உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே வெற்றியடைய முடியும் என்று, இந்திய தட கள முன்னாள் வீராங்கனை ஷைனி வில்சன் தெரிவித்தார்.

  திருப்பூர் மாவட்டம், தாராபுரத்திலுள்ள விவேகம் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விளையாட்டு தினவிழாவை துவக்கி வைத்து ஷைனி வில்சன் பேசியதாவது: வாழ்க்கையில் எப்பணியை மேற்கொண்டாலும் தன்னம்பிக்கையுடனும் ஈடுபாட்டுடனும் மேற்கொள்ள வேண்டும். விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவையே வெற்றி என்னும் குறிக்கோளை அடைய உதவும்.

  தினசரி காலை, மாலை இரு வேளைகளிலும் 20 கி.மீ. தூரம் ஓட்டப் பயிற்சி மேற்கொள்வேன். ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியினருக்கு முன்னணி வகித்து தேசியக்கொடியை ஏந்திச் சென்றது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய கெüரவம். தற்போது கல்வி மிக முக்கியமானதாகி விட்டது. எனவே விளையாட்டில் அதிக கவனம் செலுத்தும் மாணவர்கள் கல்வியையும் கவனிக்கத் தவறிவிடக் கூடாது. சிறுநகரம், பெருநகரம் என்ற பாகுபாடின்றி கிராமப்புற மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட வேண்டும்.

  முயன்றால் முடியாதது ஏதுமில்லை. கிராமத்தில் பிறந்து விளையாட்டுத் துறையில் ஈடுபட்டு பதக்கம் பெற்றவர்கள் பலர் உள்ளனர். எனவே ஒவ்வொருவரும் தங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை ஒதுக்கிவிட்டு ஈடுபாட்டுடன் ஈடுபட்டால் எத்துறையிலும் வெற்றி பெறலாம் என்றார். விழாவுக்கு பள்ளித் தாளாளர் ஆர்.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலர் கே. பூபதி, இயக்குனர் என்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம் தட கள வீராங்கனை எஸ். ஷிபானி, தேசிய தட கள வீராங்கனை எஸ். ஷன்மதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai