சுடச்சுட

  
  spt3

  எழுபத்து ஐந்தாவது டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டியின் 10-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினுடன் டிரா செய்தார்.

  நெதர்லாந்தின் விக் ஆன் ஸீ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 10-வது சுற்றின் முடிவில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்ùஸன் 8 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

  இந்தியாவின் ஆனந்த், ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியன், அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா ஆகியோர் தலா 6.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளனர்.

  ஹங்கேரியின் பீட்டர் லீகோ, ரஷியாவின் கர்ஜாகின் ஆகியோர் 5.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், இந்தியாவின் ஹரிகிருஷ்ணன், நெதர்லாந்தின் வான் வீலி ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும் உள்ளனர்.

  முன்னதாக 10-வது சுற்றில் சீனாவின் இய்ஃபான் ஹெü, இந்தியாவின் ஹரிகிருஷ்ணனையும், ஆர்மேனியாவின் லெவோன் ஆரோனியன், சீனாவின் வாங் ஹாவையும், நார்வேயின் மாக்னஸ் கார்ல்ùஸன், நெதர்லாந்தின் இர்வின் எல்.ஆமியையும், அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா, இத்தாலியின் ஃபேபியானோ கர்வானாவையும், ஹங்கேரியின் பீட்டர் லீகோ, நெதர்லாந்தின் இவான் சோகோலோவையும் தோற்கடித்தனர்.

  நெதர்லாந்தின் வான் வீலி-அனிஷ் கிரி இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai