சுடச்சுட

  
  spt5

  சென்னை ஓபன் சர்வேதச கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் இந்திய வீரர் லலித் பாபு (படம்) சாம்பியன் பட்டம் வென்றார்.

  சென்னை நேரு மைதானத்தில் 5-வது சென்னை ஓபன் செஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 11-வது மற்றும் இறுதிச்சுற்றுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது. இந்த சுற்றின் முடிவில் ஆந்திரத்தைச் சேர்ந்தவரான லலித் பாபு மற்றும் சீனாவின் லு ஷாங்லே ஆகியோர் 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர். பின்னர், இவர்கள் இருவருக்குமிடையே நடைபெற்ற டை பிரேக்கர் முறையில் லலித் பாபு சாம்பியன் பட்டத்தை வென்றார்.

  முன்னதாக, 11-வது சுற்றில் விளையாடிய லலித் பாபு, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஸ்வப்னிலைத் தோற்கடித்தார். இதன்மூலம் அவர் 9 புள்ளிகளைப் பெற்றார். இப்போட்டியில் எந்த சுற்றுகளிலும் லலித் பாபு தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 11 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் விளையாடிய அவர், 7 ஆட்டங்களில் வெற்றியும், நான்கில் டிராவும் செய்தார்.

  இந்த வெற்றியின் மூலம் சென்னை ஓபன் பட்டத்தை 5 முறை வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை லலித் பாபு பெற்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பையும் லலித் கைப்பற்றினார்.

  போட்டியின் மொத்த பரிசுத் தொகையான ரூ. 10 லட்சத்தில், சாம்பியன் பட்டம் வென்ற லலித் பாபுவுக்கு ரூ. 2 லட்சம் ரொக்கம் பரிசாக அளிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai