சுடச்சுட

  

  சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) இருபது ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது.

  தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசையில், ஒரு ரேட்டிங் புள்ளியை இழந்தபோதிலும், 119 புள்ளிகளுடன் 3-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது இந்தியா. இலங்கை அணி 127 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நடப்புச் சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.

  பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் விராட் கோலி 730 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், சுரேஷ் ரெய்னா 718 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், யுவராஜ் சிங் 13-வது இடத்திலும், கெüதம் கம்பீர் 17-வது இடத்திலும் உள்ளனர்.

  ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில், நியூஸிலாந்தின் பிரென்டன் மெக்கல்லம் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

  பெüலர்கள் தரவரிசையில் இந்திய வீரர்களின் அஸ்வின் மட்டுமே முதல் இருபது இடங்களுக்குள் உள்ளார். அவர் 16-வது இடத்தில் உள்ளார்.

  பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் முதலிடத்திலும், இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் கிரீம் ஸ்வான் 3-வது இடத்திலும் உள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai