சுடச்சுட

  
  pooniya

  ஹரியாணாவைச் சேர்ந்த வட்டு எறியும் வீராங்கனை கிருஷ்ணா பூனியா, போலீஸ் அதிகாரியாக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை ஹரியாணா அரசு புதன்கிழமை வெளியிட்டது.

  பூனியாவைத் தவிர விகாஸ் கிருஷ்ணன் (குத்துச் சண்டை), ரவீந்தர் சிங் சங்வான் (மல்யுத்தம்), பிரம்ஜித் சமோதா (குத்துச்சண்டை) மற்றும் சனம் கிருஷ்ணன் சிங் (டென்னிஸ்) ஆகியோரும் டிஎஸ்பிக்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து பாரா (ஊனமுற்றோருக்கான) ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தடகள வீரர்களான அமித் குமார், சரோஹா மற்றும் தீபா மாலிக் ஆகியோர் விளையாட்டுப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டனர்.

  சரோஹா, 2010-ம் ஆண்டு நடைபெற்ற தில்லி காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவராவார். மாலிக், பாரா ஆசியன் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக, அம்மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai