சுடச்சுட

    
    spt4

    ஹாக்கி இந்தியா லீக் போட்டியின் முதல் 6 ஆட்டங்களை 1.46 கோடி பேர் தொலைக்காட்சி மூலம் கண்டுகளித்துள்ளனர்.

    இது யூரோ கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கையைவிட 1.7 மடங்கு அதிகம். யூரோ கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் 85 லட்சம் பேர் மட்டுமே பார்த்து ரசித்துள்ளனர்.

    இந்தியாவின் பிரபல கால்பந்து போட்டியான ஐ-லீக் போட்டியை ஒரு வாரத்தில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், ஹாக்கி இந்தியா லீக் போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை சுமார் 24 மடங்கு அதிகம்.

    இந்தத் தகவலை டி.ஏ.ம். மற்றும் எச்.ஐ.எல். ஆய்வு நிறுவனம் தெரிவித்ததாக இ.எஸ்.பி.என். சாஃப்ட்வேர் இந்தியா லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai