சுடச்சுட

  

  சிறப்பு ஒலிம்பிக்: இந்தியாவின் சார்பில் 58 பேர் பங்கேற்பு

  By dn  |   Published on : 26th January 2013 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் 58 தட கள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

  இந்தியாவின் சார்பில் அதிக வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டி இதுதான். இப் போட்டி வரும் 29-ம் தேதி தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் தொடங்குகிறது.

  இப் போட்டியில் பங்கேற்பதற்காக தென் கொரியா செல்லும் 58 வீரர், வீராங்கனைகள், 15 பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என மொத்தம் 79 பேர் அடங்கிய குழுவுக்கு பிரமாண்ட வழியனுப்பு விழா தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  இந்திய வீரர்கள் ஃபிகர் ஸ்கேட்டிங் உள்ளிட்ட 6 விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்றனர். ஃபிகர் ஸ்கேட்டிங், ஸ்பீட் ஸ்கேட்டிங் போட்டிகளில் இந்திய வீரர்கள் முதல்முறையாக பங்கேற்கின்றனர்.

  இதுதவிர ஃபுளோர் ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல்முறையாக பங்கேற்கிறது.

  இந்த முறை அதிக வீரர்கள் பங்கேற்பதால் இந்தியாவுக்கு அதிக பதக்கம் கிடைக்கும் என்று இந்திய விளையாட்டுக் குழு தலைவர் ஏர் மார்ஷல் கர்கால் தெரிவித்தார்.

  2009-ம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 தங்கம் உள்பட 15 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

  சிறப்பு ஒலிம்பிக் என்பது மன வளர்ச்சி குன்றியவர்களுக்காக நடத்தப்படும் போட்டியாகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai