சுடச்சுட

  

  சென்னையில் ஆசிய தட களம்: கல்மாடி தலைமையில் இன்று விவாதம்

  By dn  |   Published on : 26th January 2013 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னையில் வரும் ஜூலையில் நடைபெறவுள்ள ஆசிய தட களப் போட்டி குறித்து விவாதிப்பதற்காக கல்மாடி தலைமையில் ஆசிய தட கள சங்கக் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

  2010-ம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சுரேஷ் கல்மாடி, இக்கூட்டத்துக்கு தலைமை வகிக்க சிலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

  இக்கூட்டத்தில் சர்வதேச தட கள சம்மேளன தலைவர் லேமின் டியாக் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர். இது தொடர்பாக ஆசிய தட கள சம்மேளனத்தின் செயலர் மெளரிஸ் நிகோலஸ் கூறுகையில், "கூட்டத்துக்கு கல்மாடி தலைமை வகிப்பதில் எவ்விதத் தவறும் கிடையாது. அவர்தான் ஆசிய தட கள சங்கத்தின் தலைவர். எனவே வழக்கப்படி அவர்தான் செயற்குழு கூட்டத்துக்கு தலைமை வகிக்க வேண்டும். இக்கூட்டத்தில் சென்னையில் நடைபெறவுள்ள ஆசிய தட களப் போட்டி மற்றும் ஆசிய தட கள சங்கத்தின் இந்த ஆண்டுக்கான அட்டவணை குறித்து விவாதிக்கவுள்ளோம்' என்றார்.

  ஆசிய தட கள சங்கக் கூட்டத்துக்கு கல்மாடி தலைமை வகிக்க முன்னாள் வீரர்களால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பான "கிளீன் ஸ்போர்ட்ஸ் இந்தியா' கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் உத்தரவை மீறிய செயல் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai