சுடச்சுட

  
  spt3

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற முன்னாள் உலகச் சாம்பியன் மேரி கோம் ஆகியோருக்கு இந்தியாவின் 3-வது உயரிய விருதான பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுதவிர, மலையேற்ற வீராங்கனையான பிரேமலதா அகர்வால், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நாகராஜீ கெüடா கிரிஸô, லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய் குமார், குத்துச்சண்டை வீரர் கங்கோம் டிங்கோ சிங், படகுப் போட்டி வீரர் பஜ்ரங் லால் தாக்கர் ஆகிய 6 பேருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  ராகுல் திராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,288 ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,889 ரன்களையும் குவித்துள்ளார். சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் இவர் 3-வது இடத்தில் உள்ளார்.

  இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம், ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையாவார். இவர் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai