சுடச்சுட

  

  ஜான் நினைவு ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் லயோலா கல்லூரி, செயின்ட் ஜோசப் கல்லூரி உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

  சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியின் 2-வது நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் பிரிவு ஆட்டங்களில் பனிமலர் பொறியியல் கல்லூரி அணி 25-8, 25-13 என்ற கணக்கில் டிஆர்பிசிசி இந்துக் கல்லூரி அணியையும், ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி 25-7, 25-4 என்ற கணக்கில் சட்டக் கல்லூரி அணியையும் வீழ்த்தின.

  மற்ற ஆட்டங்களில் டிஆர்பிசிசி இந்துக் கல்லூரி அணி, எம்.ஐ.டி. அணியையும், வேல்ஸ் கல்லூரி, சரஸ்வதி கல்லூரியையும், லயலோ கல்லூரி, அக்னி கல்லூரியையும், ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி, சட்டக் கல்லூரி அணியையும் வீழ்த்தின.

  மகளிர் பிரிவு ஆட்டங்களில் கே.சி.டெக் கல்லூரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, வேல்ஸ் பொறியியல் கல்லூரி அணிகள் வெற்றி கண்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai