சுடச்சுட

  
  spt2

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸின் விக்டோரியா அசரென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.

  இதன்மூலம் தொடர்ந்து 2-வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றதோடு, சர்வதேச தரவரிசையிலும் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் அசெரன்கா. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் விக்டோரியா அசரென்கா 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சீனாவின் லீ நாவை தோற்கடித்தார்.

  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய லீ நா, 4-வது கேமில் அசெரன்காவின் சர்வீûஸ முறியடித்தார். இதன்மூலம் முதல் செட்டை லீ நா 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

  லீ நா காயம்: பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் அசெரன்கா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, லீ நாவின் இடது கணுக்கால் திருகியது. இதையடுத்து சிகிச்சைப் பெற்ற லீ நா, காலில் கட்டுப்போட்ட நிலையில், 2-வது செட்டில் விளையாடினார். இதன்பிறகு லீ நா கடுமையாகப் போராடியபோதும், 2-வது செட் 6-4 என்ற கணக்கில் அசரென்கா வசமானது.

  பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் லீ நா 2-1 என்ற நிலையில் இருந்தபோது மீண்டும் கணுக்கால் திருகியது. இதனால் கீழே விழுந்த அவருக்கு தலையின் பின்பகுதியிலும் அடிபட்டது.

  இதையடுத்து 2-வது முறையாக சிகிச்சை பெற்ற அவர் மீண்டும் களம் புகுந்தார். எனினும் அசரென்காவின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை. 9-வது கேமில் லீ நாவின் சர்வீûஸ முறியடித்த அசெரன்கா, 6-3 என்ற கணக்கில் இந்த செட்டை கைப்பற்றினார்.

  தற்போது டென்னிஸ் விளையாடி வரும் வீராங்கனைகளில் கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் 2 அல்லது அதற்குமேல் சாம்பியன் பட்டம் வென்றவர்கள் 5 பேர் மட்டுமே. அதில் அசரென்காவும் ஒருவர். அசரென்கா இரு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பட்டம் வென்றுள்ளார்.

  அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 15 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், வீனஸ் வில்லியம்ஸ் 7 பட்டங்களையும், ரஷியாவின் மரியா ஷரபோவா 4 பட்டங்களையும், ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா 2 பட்டங்களையும் வென்றுள்ளனர்.

  10 கோடி பேர் கண்டுகளிப்பு: கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமைக்குரியவரான லீ நா, இறுதி ஆட்டத்தில் விளையாடியபோது, அவருடைய சொந்த நாடான சீனாவில் சுமார் 10 கோடி பேர் தொலைக்காட்சி மூலம் பார்த்து ரசித்துள்ளனர்.

  இரட்டையர் பிரிவில் பிரையன் சகோதரர்கள் சாம்பியன்

  ஆடவர் இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் சகோதரர்கள் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

  இந்த ஜோடி சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸி-இகர் சிஸ்லிங் ஜோடியைத் தோற்கடித்தது.

  பிரையன் சகோதரர்கள் ஜோடி 13-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் கிராண்ட் ஸ்லாம் வரலாற்றில் இரட்டையர் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை (12) வென்றிருந்த ஆஸ்திரேலியாவின் ஜான் நியூகம்பே-டோனி ரோஜி ஜோடியின் சாதனையை முறியடித்துள்ளது பிரையன் சகோதரர்கள் ஜோடி.

  பிரையன் சகோதரர்கள் ஜோடி ஆஸ்திரேலிய ஓபனில் வெல்லும் 6-வது பட்டம் இது. எனினும் ஆஸ்திரேலிய ஓபனில் அதிக பட்டங்களை வென்ற ஜோடி என்ற சாதனை ஆஸ்திரேலியாவின் ஜான் புரோம்-அட்ரியான் கிஸ்ட் ஜோடியின் வசமே இன்றளவும் உள்ளது. இந்த ஜோடி 8 முறை பட்டம் வென்றுள்ளது.

  2005-ம் ஆண்டு முதல் தற்போது வரை பிரையன் சகோதரர்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு கிராண்ட் ஸ்லாம் போட்டியிலாவது பட்டம் வென்றுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai