சுடச்சுட

  

  இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான தடை நீடித்தாலும், திட்டமிட்டபடி சென்னையில் ஆசிய தட கள விளையாட்டுப் போட்டி நடைபெறும் என்று ஆசிய தட கள சங்கம் அறிவித்துள்ளது.

  தில்லியில் தலைவர் சுரேஷ் கல்மாடி தலைமையில் நடைபெற்ற ஆசிய தட கள சங்கக் கூட்டத்துக்குப் பிறகு அதன் செயலர் மௌரிஸ் நிகோலஸ் கூறுகையில், "ஆசிய தட கள விளையாட்டுப் போட்டி திட்டமிட்டபடி வரும் ஜூலை 3 முதல் 7 வரை சென்னையில் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சென்னை நேரு மைதானத்தை நேரில் சென்று பார்த்தேன். அங்கு நடைபெற்று வரும் பணிகள் மனநிறைவு அளிக்கிறது' என்றார்.

  முன்னதாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில், இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு தடை விதித்திருப்பதால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai