சுடச்சுட

  

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இலங்கை.

  முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்தது. பின்னர் பேட் செய்த இலங்கை 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

  ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பிஞ்ச் 1, ஷான் மார்ஷ் 22 பந்துகளில் 6, கேப்டன் பெய்லி 11 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

  தனிநபராகப் போராடிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 62 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 90 ரன்களும், 5-வது வீரராக களமிறங்கிய ஆடம் வோஜஸ் 25 ரன்களும் சேர்க்க, அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்தது. இலங்கைத் தரப்பில் குலசேகரா 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

  இலங்கை வெற்றி: பின்னர் ஆடிய இலங்கை அணியில் குஷல் பெரேரா 33, திரிமானி 20, தில்ஷான் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு ஜோடி சேர்ந்த மேத்யூஸýம், திசாரா பெரேராவும் சிறப்பாக ஆடி இலங்கைக்கு வெற்றி தேடித்தந்தனர்.

  மேத்யூஸ் 27 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35, பெரேரா 12 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். வார்னர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  இந்த வெற்றியின் மூலம் இரு ஆட்டங்கள் கொண்ட இருபது ஓவர் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai