சுடச்சுட

  

  மாநில வாலிபால்: அரையிறுதியில் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி உள்பட 3 அணிகள்

  By dn  |   Published on : 27th January 2013 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னையில் நடைபெற்று வரும் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் கோவை ஸ்ரீகிருஷ்ணா, செயின்ட் ஜோசப், வேல்ஸ் பல்கலை அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

  ஜான் நினைவு ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் சார்பில் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்லூரி அணி 25-21, 25-22, 25-21 என்ற கணக்கில் வேல்ஸ் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

  மகளிர் பிரிவு காலிறுதி ஆட்டங்களில் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி அணி 25-12, 25-12, 25-17 என்ற கணக்கில் ராணி மேரி கல்லூரி அணியையும், வேல்ஸ் பல்கலைக்கழக அணி 25-12, 25-19, 23-25, 25-13 என்ற கணக்கில் சென்னை டபிள்யூ.சி.சி. கல்லூரி அணியையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai