சுடச்சுட

  
  spt3

  ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மும்பைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் செளராஷ்டிரம் அணி தனது முதல் இன்னிங்ஸில் 75.3 ஓவர்களில் 148 ரன்களுக்கு சுருண்டது.

  மும்பையில் சனிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் செளராஷ்டிர பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மும்பை பெளலர் குல்கர்னி, செளராஷ்டிரத்தின் ஜோகியானி (1), ஆர்.ஆர்.தேவ் (3) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார்.

  இதையடுத்து எஸ்.எஸ்.கோடக்குடன் இணைந்தார் வசவதா. அந்த அணி 36 ரன்களை எட்டியபோது எஸ்.எச்.கோடக் 14 ரன்களில் வீழ்ந்தார். பின்னர் வந்த ஜாக்சன் 5 ரன்களிலும், கேப்டன் ஜெயதேவ் ஷா ரன் ஏதுமின்றியும் வெளியேற 5 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது செளராஷ்டிரம்.

  சிறப்பாக ஆடிய வசவதா 9 பவுண்டரிகளுடன் 55, மக்வானா 26, உனட்கட் 22 ரன்கள் எடுத்தனர். கடைசி விக்கெட்டாக திரிவேதி 2 ரன்களில் ஆட்டமிழக்க செüராஷ்டிரத்தின் முதல் இன்னிங்ஸ் 148 ரன்களில் முடிவுக்கு வந்தது. மும்பை தரப்பில் குல்கர்னி 4 விக்கெட்டுகளையும், அபிஷேக் நாயர், தபோல்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

  மும்பை-19/0: பின்னர் பேட் செய்த மும்பை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. வாசிம் ஜாபர் 11, ரமேஷ் பவார் 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 2-வது நாள் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai