சுடச்சுட

  

  சென்னை ஓபன் பாட்மிண்டன் போட்டிக்கு ரூ.1 கோடி நிதி: ஜெயலலிதா

  By dn  |   Published on : 28th January 2013 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jaya

  சென்னை ஓபன் சூப்பர் பாட்மிண்டன் விளையாட்டுப் போட்டியை நடத்திட ரூ.1 கோடியை ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

  சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சென்னை ஓபன் ஸ்குவாஷ் போட்டிகளைத் தொடர்ந்து சென்னை ஓபன் பாட்மிண்டன் போட்டிக்கும் தமிழக அரசு நிதியுதவி செய்கிறது.

  இது தொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: நேரு உள் விளையாட்டரங்கில் குளிர்சாதன வசதிகள், ஓளி விளக்கு வசதிகள் பழுதடைந்துள்ளன. இவற்றை மாற்றியமைக்கவும், உலகத் தரத்திலான ஒலியமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் ரூ.5 கோடி செலவில் பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

  மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் வகையில், அவர்களிடையே மாநில அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்க ரூ.30 லட்சம் மானியம் வழங்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

  இந்தப் போட்டிகளில் பங்கேற்று முதல் இடம்பிடிக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் ரூ.5 ஆயிரமும், இரண்டாம் இடம் பெறுவோருக்கு ரூ.3 ஆயிரமும், மூன்றாமிடம் பெறுவோருக்கு ரூ.2 ஆயிரமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.

  கடற்கரை மாவட்டங்களில் விளையாட்டை மேம்படுத்த தமிழகத்தில் உள்ள 10 கடற்கரை மாவட்டங்களில் கடற்கரை கால்பந்து, கடற்கரை வாலிபால், கபடி போன்ற போட்டிகளை நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு ஒரு முறை மானியமாக ரூ.20 லட்சமும், தொடர் மானியமாக ரூ.5 லட்சமும் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளார். இப்போட்டியில் முதல் பரிசாக ரூ.4 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 1000 வழங்கப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai