Enable Javscript for better performance
செய்திகள் சில வரிகளில்...- Dinamani

சுடச்சுட

    

    * உத்தரப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹாக்கி இந்தியா லீக் ஆட்டத்தில் பஞ்சாப் வாரியர்ஸ் அணி 4-3 என்ற கணக்கில் உத்தரப் பிரதேச விஸார்ட்ஸ் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் பஞ்சாப் அணி 20 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

    * மும்பை இண்டியன்ஸ் ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான நியூஸிலாந்தைச் சேர்ந்த ஜான் ரைட் நியமிக்கப்பட்டுள்ளார்.

    * விளையாட்டு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, இந்திய தட கள சம்மேளனம் (ஏஎஃப்ஐ) தனது விதிமுறையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி ஏஎஃப்ஐயின் செயற்குழு உறுப்பினர்களாக இல்லாதவர்களும் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட முடியும். அடுத்த மாதம் ஏஎஃப்ஐ நிர்வாகிகள் தேர்தல் நடைபெறவுள்ளது.

    * மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தான் அணி ஒடிசா மாநிலம் கட்டக்கிற்கு வருவதை முன்னிட்டு உத்கல் பாரத் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் ஏற்கெனவே, பாகிஸ்தான் அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai