சுடச்சுட

  
  spt2

  ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ஜோகோவிச் 6-7 (2), 7-6 (3), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை வீழ்த்தினார்.

  இதன்மூலம் ஓபன் ஏராவில் (1968-ல் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் விளையாட அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரையிலான காலம்) ஆஸ்திரேலிய ஓபனில் தொடர்ச்சியாக 3 முறை பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை ஜோகோவிச் படைத்துள்ளார். இதுமட்டுமின்றி, தரவரிசையிலும் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

  ஓபன் எரா மற்றும் அதற்கு முந்தைய காலம் என்று கணக்கிடும்போது, இந்த சாதனையை செய்த 3-வது வீரர் ஜோகோவிச். முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஜேக் கிராவ்ஃபோர்டு 1931 முதல் 1933 வரை தொடர்ச்சியாக 3 முறையும், ஆஸ்திரேலியாவின் ராய் எமர்ùஸன் 1963 முதல் 1967 வரை தொடர்ச்சியாக 5 முறையும் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றுள்ளனர். இது ஜோகோவிச் வென்ற 6-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இதில் 4 பட்டங்கள் ஆஸ்திரேலிய ஓபனில் வென்றதாகும். 2008, 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றுள்ளார்.

  ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றதோடு மட்டுமல்லாமல், கிராண்ட் ஸ்லாம் போட்டியில் முர்ரேவின் தொடர் வெற்றிக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் ஜோகோவிச். அமெரிக்க ஓபனில் தொடங்கி, ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதி வரை தொடர்ச்சியாக 13 ஆட்டங்களில் முர்ரே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

  கிராண்ட் ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்றில் 2-வது முறையாக முர்ரேவை வீழ்த்தியுள்ளார் ஜோகோவிச். முன்னதாக 2011 ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச் சுற்றில் ஜோகோவிச்சிடம் தோல்வி கண்டார் முர்ரே.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai