சுடச்சுட

  

  அகில இந்திய அளவில் பெரிய துறைமுகங்களுக்கு இடையிலான ஹாக்கிப் போட்டி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்குகிறது. வரும் வியாழக்கிழமை நிறைவடைகிறது.

  அகில இந்திய பெரிய துறைமுகங்களின் விளையாட்டு கட்டுப்பாட்டுக் குழு மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக விளையாட்டுக் குழுவின் சார்பில் நடைபெறும் இப் போட்டியில் கொல்கத்தா, பாரதீப், மும்பை, விசாகப்பட்டினம், சென்னை, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் ஆகிய பெரிய துறைமுகங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.

  போட்டிகள் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் நடைபெறும். போட்டியை மாநகராட்சி ஆணையர் சோ.மதுமதி தொடங்கி வைக்கிறார்.

  இதற்கான ஏற்பாடுகளை வ.உ.சிதம்பரனார் துறைமுக விளையாட்டுக் கழகத்தினர் செய்துள்ளனர். போட்டியைக் காண அனுமதி இலவசம் என துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் (பொறுப்பு) சு. நடராஜன் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai