சுடச்சுட

  

  செளராஷ்டிரத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்துள்ளது. இதன்மூலம் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 139 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாபர் 246 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 132 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மும்பையில் சனிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சௌராஷ்டிர அணி 75.3 ஓவர்களில் 148 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து பேட் செய்த மும்பை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்திருந்தது.

  2-வது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் ரமேஷ் பவார் 21, ஆதித்ய தாரே 3, சச்சின் 22, அபிஷேக் நாயர் 26 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் வாசிம் ஜாபர் சதமடித்தார். அவர் 132 ரன்களில் ஆட்டமிழந்தார். அகர்கர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 94 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்துள்ளது.

  ஹிக்கென் ஷா 41, குல்கர்னி 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர். செüராஷ்டிரம் தரப்பில் தர்மேந்திரசிங் ஜடேஜா 2 விக்கெட் எடுத்தார்.

  ஜாபர் சாதனை

  இந்த ஆட்டத்தில் மும்பையின் வாசிம் ஜாபர் 83 ரன்கள் எடுத்தபோது ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்தவரான அமோல் மஜும்தாரின் சாதனையை (9,105 ரன்கள்) முறியடித்தார்.

  இந்த ஆட்டத்தில் 32-வது சதத்தைப் பூர்த்தி செய்ததன் மூலம் ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் அடித்தவர் என்ற பெருமையையும் ஜாபர் பெற்றார். முன்னதாக அஜய் சர்மா அடித்த 31 சதங்களே சாதனையாக இருந்தது. இதுமட்டுமின்றி முதல் தர போட்டியில் 16 ஆயிரம் ரன்களையும் கடந்தார் ஜாபர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai