சுடச்சுட

  
  anand

  டாடா ஸ்டீல் செஸ் போட்டியின் இறுதிச்சுற்று முடிவில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 8 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தார்.

  நெதர்லாந்தின் விக் ஆன் ஸீ நகரில் நடைபெற்ற 75-வது டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் ஆனந்த் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

  இந்த ஆட்டத்தில் சீனாவின் வாங் ஹாவிடம் ஆனந்த் வீழ்ந்தார். ஆனந்துடன், 8 புள்ளிகள் பெற்ற ரஷியாவின் செர்ஜி கர்ஜாகின் 3-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். இந்த ஆட்டத்தில் 3-வது இடத்தைப் பெற்ற ஆனந்த், 7 புள்ளிகள் பெற்று சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளார்.

  மாகன்ஸ் சாம்பியன்: இப்போட்டியில், 10 புள்ளிகளைப் பெற்ற நார்வேயின் மாக்னஸ் கார்லென்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். அவர், தனது கடைசிச் சுற்றில் நெதர்லாந்தின் அனீஷ் கிரியுடன் டிரா செய்தார். இவரைத் தொடர்ந்து 8.5 புள்ளிகள் பெற்ற ஆர்மீனியாவின் லேவன் அரோனியன் 2-வது இடத்தைப் பிடித்தார். இந்தியாவின் மற்றொரு வீரரான ஹரிகிருஷ்ணன் 6.5 புள்ளிகளுடன் 7-ம் இடத்தைப் பிடித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai