சுடச்சுட

    

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் ஆட்டத்தில் இலங்கை அணி டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 2 ரன்களில் வெற்றி பெற்றது.

    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. பின்னர் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 161 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஜெயவர்த்தனா ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். பெராரே ஆட்டமிழக்காமல் 15 பந்துகளில் 35 ரன்களை விளாசினார்.

    தோல்வி: மழையின் காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. இதனால் ஆஸ்திரேலிய அணி, 15 ஓவர்களில் 122 ரன்களை எடுக்க வேண்டிய சூழல் உருவானது. தொடக்க வீரர்களான வார்னர் மற்றும் ஃபின்ச் இருவரும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் பெய்லி அதிரடியாக 45 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால், இலங்கை அணி 2 ரன்களில் வெற்றி பெற்றது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்ஷ் 47 ரன்கள் எடுத்தார்.

    ஏற்கெனவே முதல் இருபது ஓவர் ஆட்டத்தில் வென்றிருந்த இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai