சுடச்சுட

    

    திருவள்ளூரில் மாநில குத்துச் சண்டை போட்டிகள் தொடக்கம்

    By dn  |   Published on : 29th January 2013 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கான மாநில குத்துச்சண்டை போட்டிகள் திருவள்ளூரில் திங்கள்கிழமை தொடங்கின.

    இம்மாதம் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கே. வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.

    தமிழகம் முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். 14, 17, 19 வயதுப் பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.

    28 கிலோ எடை முதல் 91 கிலோ வரை எடை பிரிவுகளில் 382 பேரும், 28 கிலோ முதல் 86 கிலோ எடையுள்ள பிரிவுகளில் 340 பேரும் பங்கேற்கின்றனர்.

    தொடக்க நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் நாகராஜ முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலசுப்பிரமணியன், குத்துச்சண்டை பயிற்றுநர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai