Enable Javscript for better performance
பாட்மிண்டன்: குருசாய் தத்,  சிந்து சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    
    guru

    அகில இந்திய சீனியர் தரவரிசை பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் பிரிவில் குருசாய் தத்தும், மகளிர் பிரிவில் பி.வி. சிந்துவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.

    ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள கோபிசந்த் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள குருசாய்தத் 21-19, 21-14 என்ற நேர் செட் கணக்கில் தனது நெருங்கிய நண்பரான சாய் பிரணீத்தை வீழ்த்தினார்.

    மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில்,  போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பி.வி. சிந்து 21-13, 21-19 என்ற நேர் செட் கணக்கில் அருந்ததி பந்தவனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    இரட்டையர் பிரிவு: ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் அக்ஷய் மற்றும் ஜெர்ரி சோப்ரா ஜோடி, 16-21, 21-9, 21-15 என்ற செட் கணக்கில் கே.தருண் மற்றும் அருண் விஷ்ணு ஜோடியை வீழ்த்தியது.

    மகளிர் பிரிவு ஆட்டத்தில், காத்ரி பிரத்ன்யா, ருத்விகா ஷிவானி ஜோடி 18-21, 21-17, 21-18 என்ற புள்ளிக் கணக்கில் ஜே.மேகனா, தாஸ் ரீதுபர்ணா ஜோடியை தோற்கடித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai