சுடச்சுட

  
  SINGH

  பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஓட வேண்டும் என்று 101 வயது நிரம்பிய மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர் ஃபெளஜா சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.

  பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஃபெüஜா சிங்குக்கு திங்கள்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

  விழாவில் அவர் மேலும் கூறியதாவது: 80 வயது நிரம்பிய பிரதமருடன் ஓட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சாதாரண மனிதனான எனக்கு, இங்கிலாந்து இளவரசி எலிசபெத் தேநீர் விருந்து அளித்தது பெருமையாக உள்ளது.

  கடவுள் மீது நம்பிக்கையுள்ள நான், ஓடுவது மட்டுமில்லாமல்,  சீக்கிய கலாச்சாரத்தைப் பரப்புவதை லட்சியமாகக் கொண்டுள்ளேன். என்னுடைய உறுதியே என்னை பல மைல் தொலைவு ஓட வைக்கிறது.

  கடவுள் அருளால் உலகின் பல நாடுகளில் மாரத்தான் போட்டிகளில் நான் பங்கேற்றுள்ளேன். நடப்பதும், ஓடுவதும்தான் எனது ஆரோக்யத்துக்கு உறுதுணையாக உள்ளது. எந்தவிதமான மருந்து, மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வதில்லை; வேகவைத்த உணவுகளை உண்பதில்லை.

  எனக்கு எழுதப் படிக்க தெரியாமல் இருக்கலாம். ஆனால், இன்று எனது பெயரில் ஒரு புத்தகம் உள்ளது. இது சிறந்தது இல்லையா? இன்றைய இளைஞர்கள் விளையாட்டிலும் கவனம் செலுத்தி நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று ஃபெüஜா சிங் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai