சுடச்சுட

  
  ranji

  ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் செüராஷ்டிர அணியை இன்னிங்ஸ் மற்றும் 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி கோப்பையைக் கைப்பற்றியது.

  மும்பையில் சனிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த செüராஷ்டிர அணி, முதல் இன்னிங்ஸில் 75.3 ஓவர்களில் 148 ரன்களுக்குள் சுருண்டது. பின்னர் பேட் செய்த மும்பை அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் வாசிம் ஜாபர் 132 ரன்கள் எடுத்தார்.

  திங்கள்கிழமை நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து ஆடிய மும்பை அணி, 119 ஓவர்களில் 355 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. செüராஷ்டிர அணித் தரப்பில் மக்வானா 3 விக்கெட்டுகளையும், திரிவேதி, சனந்தியா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

  3 மணி நேரத்தில் தோல்வி: 207 ரன்கள் பின்தங்கிய நிலையில் செüராஷ்டிர அணி 2-வது இன்னிங்ûஸத் தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் மும்பை பந்து வீச்சாளர்களைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ரன் கணக்கை தொடங்காமலே வெளியேறினர். தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய அஜித் அகர்கர் மற்றும் குல்கர்னி செüராஷ்டிர அணி வீரர்களை விரைவாக வெளியேற்றினர்.

  20 ரன்களுக்கு 6 விக்கெட்: ஒரு கட்டத்தில் அந்த அணி 20 ரன்களுக்கு தனது முக்கியமான 6 விக்கெட்டுகளை இழந்தது. 60 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை அணிக்கு எதிராக 25 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே செüராஷ்டிர அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக உள்ளது. அதை விட குறைவான ரன்னை இம்முறை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணியின் பின்கள வீரர்களான சனந்தியா (16) ஜடேஜா (22) அதைத் தகர்த்தனர். அணியில் இரட்டை இலக்கை எட்டிய வீரர்களான இவர்களை குல்கர்னி வெளியேற்றினார். இறுதியில் அந்த அணி 36.3 ஓவர்களில் 82 ரன்களுக்குள் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது.

  முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் எடுத்த ஜாபர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

  அகர்கர், குல்கர்னி அபாரம்: இரண்டாவது இன்னிங்ஸில் தக்க பதிலடி அளிப்போம் என்று தெரிவித்திருந்த செüராஷ்டிர கேப்டன் ஜெயதேவ் ஷாவின் கனவை மும்பை அணியின் அஜித் அகர்கரும், தவால் குல்கர்னியும் தகர்த்தனர்.

  இவர்களின் துல்லியமான பந்து வீச்சால் செüராஷ்டிர அணியின் 2-வது இன்னிங்ஸ், 3 மணி நேரத்துக்குள்ளாகவே முடிவுக்கு வந்தது. இந்த இன்னிங்ஸில் 9 ஓவர் வீசிய அகர்கர் 15 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதேசமயம், 14.3 ஓவர்கள் வீசிய குல்கர்னி, 32 ரன்களை அளித்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மற்றொரு விக்கெட்டை நாயர் வீழ்த்தினார்.

  வேகப்பந்து வீச்சாளர் அகர்கர், ரஞ்சிக் கோப்பையை வென்ற மும்பை அணியில் 7 முறை இடம் பிடித்தவர் என்ற பெருமையை பெற்றார். இம்முறை அணிக்கு கேப்டனாக அகர்கர் நியமிக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

  40 முறை வெற்றி: இந்த வெற்றியின் மூலம் 44 முறை ரஞ்சி போட்டியில் விளையாடி 40 முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை மும்பை பெற்றது. கடைசியாக 2009-10ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சிப் போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியிருந்தது. இரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் வெற்றி பெற்று தாகத்தை தணித்துக் கொண்டது மும்பை.

  பரிசுத் தொகை: ரஞ்சிக் கோப்பையைக் வென்ற மும்பைக்கு பரிசுத் தொகையாக ரூ. 2 கோடி அளிக்கப்பட்டது. செüராஷ்டிர அணிக்கு ரூ. 1 கோடி பரிசளிக்கப்பட்டது. இதுதவிர, மும்பை அணிக்கு ரூ. 3 கோடி பரிசுத் தொகை அளிக்கப்படும் என மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.

  ராணி கோப்பை: எதிர்வரும் ராணி கோப்பைக்கான போட்டியில் ரஞ்சிக் கோப்பையை வென்ற மும்பை அணி, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியுடன் மோதவுள்ளது. இந்த ஆட்டம்

  அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

  கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி
  இந்த வெற்றி குறித்து மும்பை கேப்டன் அகர்கர் கூறுகையில், அணி வீரர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது எனத் தெரிவித்தார். இந்த போட்டித் தொடர் முழுவதும் ஒவ்வொரு ஆட்டங்களின் இக்கட்டான கட்டத்தில் ஒவ்வொரு வீரரும் கை கொடுத்தனர்.

  திறமையான வீரர்களால்தான் இக்கோப்பையை எங்களால் கைப்பற்ற முடிந்தது. இக்கோப்பையை பல முறை நாங்கள் வென்றிருந்தாலும், கேப்டனாக பணியாற்றி வென்றிருப்பது மிக்க மிகழ்ச்சியைத் தந்துள்ளது என்றார். வெற்றி குறித்து சச்சின் கூறுகையில், "40-வது முறை கோப்பையை கைப்பற்றியிருப்பது நிறைவாக உள்ளது. அணியை அகர்கர் நன்கு வழிநடத்தினார். "சாம்பியன்' என்பதை மீண்டுமொருமுறை மும்பை அணி நிரூபித்துள்ளது' என்றார்.

  ரஞ்சி கோப்பைப் போட்டியில் மும்பை அணிக்காக 6 முறை சச்சின் விளையாடியுள்ளார். இதில் 5 முறை மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai