சுடச்சுட

  

  லா லிகா கால்பந்து:11 ஆட்டங்களில் தொடர்ந்து கோல் அடித்து மெஸ்ஸி சாதனை

  By dn  |   Published on : 29th January 2013 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  messi

  ஆர்ஜெண்டீனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி, லா லிகா கால்பந்து போட்டியில் தொடர்ந்து 11 ஆட்டங்களில் கோல்களை அடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

  பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆஸசுனா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

  கடந்த சீசனில் 10 ஆட்டங்களில் மெஸ்ஸி தொடர்ந்து கோல் அடித்து சாதனை படைத்திருந்தார். ஸ்பெயின் வீரர் மரியினோ மார்டீன் மற்றும் பிரேசிலின் ரொனால்டோ ஆகியோரும் 10 ஆட்டங்களில் தொடர்ந்து கோல்களை அடித்துள்ளனர். மெஸ்ஸி, இப்போது அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

  ஆஸசுனா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி, ஹாட்ரிக் கோல்களை அடித்தார். இதன் மூலம், 22 முறை ஹாட்ரிக் கோல்களை அடித்தவர் என்ற பெருமையையும் மெஸ்ஸி பெற்றார். இத்துடன் இந்த சீசனில் அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது. இதில் 33 கோல்கள் லா லிகா போட்டியில் அடிக்கப்பட்டவை.

  2004-ம் ஆண்டிலிருந்து லா லிகா போட்டியில் விளையாடி வரும் மெஸ்ஸி, 235 ஆட்டங்களில் 202 கோல்களை அடித்துள்ளார். இப்போட்டியில் 200 கோல்களுக்கு மேல் அடித்த 8-வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

  இப்போது நடைபெற்று வரும் லா லிகா போட்டியின் புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா அணி 58 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பார்சிலோனா அணிக்குப் போட்டியாகக் கருதப்படும் நடப்புச் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி 43 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. 47 புள்ளிகளுடன் அட்லெடிகோ மாட்ரிட் அணி 2-வது இடத்தில் உள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai