சுடச்சுட

  
  smith

  நூறு டெஸ்ட் ஆட்டங்களில் கேப்டன் பதவியை வகித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற உள்ளார் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித்.

  தென் ஆப்பிரிக்காவின் வான்டெரர்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் இந்த சாதனையை அவர் நிகழ்த்த உள்ளார்.

  அன்றைய தினம் ஸ்மித்தின் 32-வது பிறந்த நாள் என்பது அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

  இதையொட்டி, இந்த ஆட்டத்தின்போது ஸ்மித்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது.

  ஸ்மித், 98 டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டனாகப் பதவி வகித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் உலக லெவன் அணியை தலைமையேற்று வழி நடத்தியுள்ளார் ஸ்மித்.

  இதுவரை 107 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித், 8, 624 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 26 சதங்களையும், 36 அரை சதங்களையும் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்சம் 277 ரன்களாகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai