சுடச்சுட

  

  அகில இந்திய ஹாக்கி: அரையிறுதியில் தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா

  By dn  |   Published on : 30th January 2013 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையிலான ஹாக்கிப் போட்டியில் தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

  அகில இந்திய பெரிய துறைமுகங்களின் விளையாட்டு கட்டுப்பாட்டு குழு மற்றும் தூத்துக்குடி வஉசி துறைமுக விளையாட்டுக் குழு ஆகியவற்றின் சார்பில் தூத்துக்குடி வஉசி துறைமுக மைதானத்தில் இப் போட்டி நடைபெற்று வருகிறது.

  போட்டியின் 2-வது நாளான செவ்வாய்க்கிழமை விசாகப்பட்டினம்- சென்னை அணிகள் மோதிய முதல் ஆட்டத்தை துறைமுக தலைமைப் பொறியாளர் ரவீந்திரன் தொடங்கிவைத்தார். இதில் அபாரமாக ஆடிய விசாகப்பட்டினம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தது.

  கொல்கத்தா- பாரதீப் அணிகள் மோதிய 2-வது ஆட்டத்தை துறைமுக  தலைமைப் பொறியாளர் மத்தேயு தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில்  தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய கொல்கத்தா அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாரதீப் அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.

  சென்னை- மும்பை அணிகள் மோதிய 3-வது ஆட்டத்தை துறைமுக கண்காணிப்பு அலுவலர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

  தூத்துக்குடி- பாரதீப் அணிகள் மோதிய 4-ஆவது ஆட்டத்தை துறைமுக தலைமை மருத்துவ அதிகாரி பால்ராஜ் தொடங்கி வைத்தார். இதில் தூத்துக்குடி அணியினர் அதிரடியாக விளையாடினர். அவர்களின் ஆக்ரோஷமிக்க ஆட்டத்துக்கு பாரதீப் வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் தூத்துக்குடி அணி 7-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

  வியாழக்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி அணி, சென்னை அணியை சந்திக்கிறது. 2-வது அரையிறுதி ஆட்டத்தில் கொல்கத்தா- விசாகப்பட்டினம் அணிகள் மோதுகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai