சுடச்சுட

  

  இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை: தோனி

  By dn  |   Published on : 30th January 2013 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  dhoni8

  இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்று கேப்டன் தோனி கூறினார்.

  சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக மேலும் கூறியது:

  சிறிய நகரமான ராஞ்சிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மேலும் அங்கு ஏராளமான மூத்த வீரர்களும், கிரிக்கெட் லீக் போட்டியும் இருந்தன. மூத்த வீரர்களைத் தாண்டி அணியில் இடம்பெறுவது கடினமானது. அந்த கடினமான போராட்டம்தான் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட வீரராக என்னை மாற்றியது.

  இந்திய அணிக்காக விளையாடி வரும் தற்போதைய சூழலில் அடுத்த போட்டிக்கோ அல்லது அடுத்த தொடருக்கோ தேர்வு செய்யப்படுவேனா என்பதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதில்லை. அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.

  சிறிய நகரங்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கும் ஊடகங்கள் முக்கியத்துவம் அளிப்பது அதிகரித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

  கிரிக்கெட் மற்றும் விளம்பரங்களில் நடிப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த தோனி, "விளம்பரம், பல்வேறு ஒப்பந்தம் என ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும், எல்லாவற்றையும்விட கிரிக்கெட்தான் மேலானது. கிரிக்கெட் இல்லாத நேரங்களில் வேறு எதுவும் இருக்காது. எனவே மற்றவற்றுக்காக நேரம் ஒதுக்குவது எளிது.

  விளம்பர படங்களில் நடிக்கும் நேரங்களில் கிரிக்கெட் பற்றிய எண்ணமின்றி இருப்பதோடு, பல்வேறு முக்கிய நபர்களிடம் பேச முடிகிறது. போட்டி இல்லாத நேரங்களில் நான் விரும்பும் எல்லா உணவையும் சாப்பிடுகிறேன். உணவு விஷயத்தில் மட்டும் எப்போதும் மனநிறைவு அடையமாட்டேன்' என்றார்.

  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் கூறுகையில், "என்னுடைய பேட்டிங், கிரிக்கெட் நுட்பத்தின்படி சரியானதல்ல. எனினும் மனதளவில் நான் மிக வலுவாக இருக்கிறேன்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai