சுடச்சுட

  

  இரானி கோப்பை: ரெஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு சேவாக் கேப்டன்

  By dn  |   Published on : 30th January 2013 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Shewag

  இரானி கோப்பையில் விளையாடவுள்ள ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு வீரேந்திர சேவாக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  ரெஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் வென்ற மும்பை அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை போட்டி வரும் பிப்ரவரி 6 முதல் 10 வரை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

  இதற்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ள கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணி மற்றும் இந்திய "ஏ' அணி ஆகிய 3 அணிகளும் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்வுக் குழு கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டன.

  இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் நீக்கப்பட்ட சேவாக், தற்போது ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த் ஆகியோருக்கும் அந்த அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  அதேநேரத்தில் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் கம்பீருக்கு இரானி கோப்பையில் மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ள இந்திய "ஏ' அணி, வாரியத் தலைவர் அணி என எதிலும் இடம் கிடைக்கவில்லை. ஜாகீர் கான், உமேஷ் யாதவ் ஆகியோரும் இரானி கோப்பை போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை.

  காயத்திலிருந்து மீண்டுள்ள மனோஜ் திவாரி, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் மட்டுமின்றி, இந்திய "ஏ' அணியிலும் இடம்பிடித்துள்ளார்.  ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் 6 பேட்ஸ்மேன்கள், 6 பெüலர்கள், ஆல்ரவுண்டர் ஜலஜ் சக்சேனா, விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா என 14 பேர் இடம்பெற்றுள்ளனர்.

  இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணிக்கு தமிழக வீரர் அபிநவ் முகுந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் கிரிக்கெட் வாரியத் தலைவர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வரும் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.

  இந்திய ஏ அணிக்கு டெல்லி வீரர் ஷிகர் தவாண் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஏ அணி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் வரும் பிப்ரவரி 16 முதல் 18 வரை சென்னையில் நடைபெறுகிறது.

  அணிகள் விவரம்: ரெஸ்ட் ஆஃப் இந்தியா: வீரேந்திர சேவாக் (கேப்டன்), ஷிகர் தவாண், முரளி விஜய், மனோஜ் திவாரி, சுரேஷ் ரெய்னா, ரித்திமான் சாஹா, ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்த், பிரக்யான் ஓஜா, ஐஸ்வர் பாண்டே, அபிமன்யூ மிதுன், அம்பட்டி ராயுடு, சமி அஹமது, ஜலஜ் சக்சேனா.

  வாரியத் தலைவர் லெவன் அணி: அபிநவ் முகுந்த் (கேப்டன்), ராபின் உத்தப்பா, அம்பட்டி ராயுடு, மன்தீப் சிங், கேதார் ஜாதவ், பார்திவ் படேல், ஸ்டூவர்ட் பின்னி, சரப்ஜித் லேடா, பர்வீஸ் ரஸþல், முகமது சமி, பர்விந்தர் அவானா, கமலேஷ் மக்வானா.

  இந்திய "ஏ' அணி: ஷிகர் தவாண் (கேப்டன்), ஜிவான்ஜோத் சிங், ரோஹித் சர்மா, மனோஜ் திவாரி, அஜிங்க்யா ரஹானே, சி.எம்.கெüதம், ராகேஷ் துருவ், ஜலஜ் சக்சேனா, மன்பிரீத் கோனி, வினய் குமார், தவால் குல்கர்னி, அசோக் மேனரியா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai