சுடச்சுட

  
  29SPTTIGER

  அமெரிக்காவின் பிரபல கோல்ஃப் வீரரான டைகர் உட்ஸ் 75-வது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். 

  அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள டோரே பைன்ஸ் கோல்ஃப் மைதானத்தில் நடைபெற்ற அமெரிக்க பிஜிஏ (தொழில்முறை கோல்ஃப் வீரர்கள் சங்கம்) ஓபன் போட்டியில் வென்றதன் மூலம் 75-வது பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். கடுமையான காற்று வீசியபோதும் சிறப்பாக விளையாடி சாம்பியன் ஆனார்.

  டோரே பைன்ஸ் மைதானத்தில் டைகர் உட்ஸ் பெற்ற 8-வது வெற்றி இது. இதன்மூலம் டோரே பைன்ஸ் மைதானத்தில் அதிக முறை வெற்றி கண்ட தொழில்முறை வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதேபோல் பேஹில், பயர்ஸ்டோன் மைதானங்களில் நடைபெற்ற பிஜிஏ போட்டிகளிலும் தலா 7 முறை பட்டம் வென்றுள்ளார்.

  கோல்ஃப் விளையாட்டில் பெரிய போட்டிகளில் (மாஸ்டர்ஸ் போட்டி, அமெரிக்க ஓபன், தி ஓபன் சாம்பியன்ஷிப், பிஜிஏ சாம்பியன்ஷிப்) அவர் வென்ற 14-வது பட்டம் இது. இன்னும் 4 பட்டங்களை டைகர் உட்ஸ் வெல்லும் பட்சத்தில் பெரிய போட்டிகளில் அதிக பட்டங்கள் வென்ற சகநாட்டவரான ஜேக் நிகோலஸின் சாதனையை (18 பட்டங்கள்) சமன் செய்வார்.

  டைகர் உட்ஸ் இன்னும் 8 சாம்பியன் பட்டங்களை வெல்லும் பட்சத்தில், கோல்ஃப் விளையாட்டில் அதிக பட்டங்கள் வென்றவரான அமெரிக்காவின் சாம் ஸ்னீத்தின் சாதனையை (82 பட்டங்கள்) முறியடித்துவிடுவார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai