சுடச்சுட

    

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) இருபது ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி 119 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது.

    இலங்கை அணி 131 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரில் இலங்கை 2-0 என்ற கணக்கில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.

    நடப்புச் சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் 122 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் முறையே 4, 5, 6, 7-வது இடங்களில் உள்ளன.

    கோலிக்கு பின்னடைவு: இந்திய வீரர் விராட் கோலி 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முன்னதாக 5-வது இடத்தில் இருந்த அவர், தற்போது ஓர் இடம் சரிந்துள்ளார். இதேபோல் சுரேஷ் ரெய்னா ஓர் இடம் சரிந்து தற்போது 9-வது இடத்தில் உள்ளார். யுவராஜ் சிங் 13, கம்பீர் 17-வது இடங்களில் உள்ளனர்.

    நியூஸிலாந்தின் பிரென்டன் மெக்கல்லம் 794 புள்ளிகளுடன் முதலிடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் கிறிஸ் கெயில் 792 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இலங்கையின் மஹேல ஜெயவர்த்தனா 768 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 767 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai