சுடச்சுட

  

  மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் புதன்கிழமை தொடங்குகிறது.

  2012-13 ஆம் ஆண்டுக்கான பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் 14, 17, 19 ஆகிய வயது பிரிவினருக்கான நீச்சல் போட்டி திருச்சியில் இரு நாள்கள் நடைபெறுகின்றன.

  இப் போட்டியில் சென்னை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, கோவை, பெரம்பலூர், கடலூர், கன்னியாகுமரி, ஈரோடு மற்றும் திருச்சி ஆகிய 15 மண்டலங்களிலிருந்து வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர் என ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai