சுடச்சுட

  
  vishnuva

  அகில இந்திய ரேங்கிங் டென்னிஸ் போட்டியில் விஷ்ணுவர்தன் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

  மும்பையில் நடைபெற்று வரும் ஓம்கார் அகில இந்திய ரேங்கிங் டென்னிஸ் போட்டியில் விளையாடி வரும் இந்தியாவின் 4-ம் நிலை வீரரான விஷ்ணுவர்தன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் சுற்றில் 6-4, 7-6 (3) என்ற நேர் செட்களில் அன்வித் பென்ட்ரேவை வீழ்த்தினார்.

  விஷ்ணுவர்தன் அடுத்த சுற்றில் மோஹித் மயூரைச் சந்திக்கிறார். மயூர் தனது முதல் சுற்றில் 6-0, 6-1 என்ற நேர் செட்களில் யுவராஜ் செளத்ரியைத் தோற்கடித்தார்.

  இந்தியாவின் 7-ம் நிலை வீரரான ஷாபாஸ் கான் புருஹத் மன்காட்டுக்கு எதிரான ஆட்டத்தில் 6-2, 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோது முழங்கால் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.

  இதேபோல் மூன்றாம் நிலை வீரரான ரோஹன் கைட், மணிக்கட்டில் காயம் ஏற்பட்டபோதும் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் சிதேஷ் காடேவைத் தோற்கடித்தார். வைல்ட்கார்ட் வீரரான ரக்ஷய் தாக்குர் 7-5, 7-6 (3) என்ற நேர் செட்களில் அப்துல்லா ஷேக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai