சுடச்சுட

  

  மகளிர் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

  மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கேப்டன் மிதாலி ராஜ் வைரஸ் காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை. அதனால் ஹர்மான்பிரீத் கெüர் கேப்டனாக செயல்பட்டார்.

  முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் நிரஞ்சனா ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்தார். முன்னதாக ரெüத் 31, காமினி 30, மேஷ்ராம் 25, ஆர்.மல்ஹோத்ரா 35 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்தலேகர் 3 விக்கெட் எடுத்தார்.

  பின்னர் பேட் செய்த ஆஸ்திரேலியா 38.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பீல்ட்ஸ் 52, பிளாக்வெல் 47 ரன்கள் எடுத்தனர். ஹீலி ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் ஏ.சர்மா 2 விக்கெட் எடுத்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai