சுடச்சுட

  

  அகில இந்திய ஹாக்கி: இறுதிச் சுற்றில் தூத்துக்குடி- கொல்கத்தா

  By dn  |   Published on : 31st January 2013 06:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tut

  தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையிலான ஹாக்கிப் போட்டியின் இறுதிச் சுற்றில் தூத்துக்குடி-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

  அகில இந்திய பெரிய துறைமுகங்களின் விளையாட்டுக் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் தூத்துக்குடி வஉசி துறைமுக விளையாட்டுக் குழு ஆகியவற்றின் சார்பில் இப்போட்டி வஉசி துறைமுக மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

  மூன்றாம் நாளான புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதியில் தூத்துக்குடி- சென்னை அணிகள் மோதின. இதில் தூத்துக்குடி அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது. தூத்துக்குடி தரப்பில் கதிரவன் 2 கோல்களும், மதன்குமார் ஒரு கோலும் அடித்தனர். சென்னை அணி தரப்பில் சம்பத் ஒரு கோல் அடித்தார்.

  2-வது அரையிறுதி ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2-0 என்ற கோல் கணக்கில் விசாகப்பட்டினம் அணியை வீழ்த்தியது. கொல்கத்தா தரப்பில் மோகன்தாஸ் சின்ஹா, ராபின்தாஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இறுதி ஆட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சென்னை- விசாகப்பட்டினம் அணிகள் மோதுகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai