சுடச்சுட

  

  இந்திய டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிப்பு: வார்னர் இடம்பெறுவது சந்தேகம்

  By dn  |   Published on : 31st January 2013 06:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  warner

  இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி வியாழக்கிழமை அறிவிக்கப்படுகிறது.

  தொடக்க ஆட்டக்காரர் வார்னருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் இந்தியத் தொடரில் விளையாடுவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

  தேர்வுக் குழு தலைவர் ஜான் இன்வெராரிட்டி தலைமையில் தேர்வுக்குழு கூடி அணியைத் தேர்வு செய்கிறது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வார்னருக்கு காயம்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் புதன்கிழமை வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் வீசிய பந்து வார்னரின் இடது கை பெரு விரலைப் பதம்பார்த்தது.

  அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகக் செய்திகள் வெளியானாலும், அந்த அணியின் உடற்செயலியல் நிபுணர் கெவின் சிம்úஸô, "சிறிய காயம்தான்.

  இதனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களில் விளையாடும் வாய்ப்பை வார்னர் இழக்கலாம். அதன்பிறகு நடைபெறும் 3 ஆட்டங்களில் அவரை களமிறக்குவது தொடர்பாக ஆராய்வோம்' என்றார்.

  இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியில் வார்னரை சேர்க்கும்பட்சத்தில், மாற்று வீரரையும் சேர்த்தே ஆஸ்திரேலிய தேர்வுக் குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்தியத் தொடரில் ஆடும் வாய்ப்பை வார்னர் இழக்கும்பட்சத்தில், அதிரடி ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்.

  இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்யும் ஆஸ்திரேலிய அணி பிப்ரவரி 22 முதல் மார்ச் 26 வரை 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 22 முதல் 26 வரை சென்னையிலும், 2-வது டெஸ்ட் மார்ச் 2 முதல் 6 வரை ஹைதராபாதிலும், 3-வது டெஸ்ட் மார்ச் 14 முதல் 18 வரை மொஹாலியிலும், 4-வது டெஸ்ட் வரும் மார்ச் 22 முதல் 26 வரை தில்லியிலும் நடைபெறுகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai