சுடச்சுட

  

  சந்தோஷ் டிராபி கால்பந்து: தகுதிச்சுற்று நாளை தொடக்கம்

  By dn  |   Published on : 31st January 2013 06:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  foot

  அறுபத்து ஏழாவது சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் வரும் வெள்ளிக்கிழமை முதல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. 67-வது சந்தோஷ் டிராபிக்கான தேசிய அளவிலான கால்பந்து போட்டியை கேரளம் மற்றும் உத்தரப் பிரதேசம் நடத்துகிறது.

  வெள்ளிக்கிழமை முதல் வரும் 9-ம் தேதி வரை கிளஸ்டர் (சிறிய அணிகள் இடம் பெற்றுள்ள பிரிவு) சி மற்றும் டி பிரிவுகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

  வரும் 9 முதல் 16 வரை பி மற்றும் சி பிரிவுகளில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன என்று உத்தரப் பிரதேச கால்பந்து சங்க பொதுச் செயலர் சம்சுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்புச் சாம்பியன் சர்வீசஸ், இறுதிச்சுற்று வரை முன்னேறிய தமிழகம், அரையிறுதி வரை முன்னேறிய கேரளம், மணிப்பூர் ஆகிய அணிகள் நேரடியாக காலிறுதியில் விளையாட தகுதிபெற்றுள்ளன. காலிறுதி ஆட்டங்கள் பிப்ரவரி 21 முதல் 26 வரை கொச்சி மற்றும் கொல்லத்தில் நடைபெறுகின்றன.

  பிப்ரவரி 27 மற்றும் 28-ம் தேதிகளில் அரையிறுதி ஆட்டங்களும், மார்ச் 3-ம் தேதி இறுதி ஆட்டமும் நடைபெறுகின்றன. இந்த மூன்று ஆட்டங்களும் கொச்சியில் நடைபெறுகின்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai