சுடச்சுட

  

  பத்தாவது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பையில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

  மும்பையில் வியாழக்கிழமை நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதுகின்றன.

  இந்திய அணி, பேட்டிங்கில் மிதாலி ராஜ், ஜுலான் கோஸ்வாமி, பூனம் ரெüத், சுலக்சனா நாயக் ஆகியோரையும், பெளலிங்கில் கெளஹெர் சுல்தானா, நிரஞ்சனா ஆகியோரையும் நம்பியுள்ளது.

  "ஜுலான் கோஸ்வாமி, அமிதா சர்மா, துணை கேப்டன் ஹர்மான்பிரீத் கெளர் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்கள். கடந்த உலகக் கோப்பையில் விளையாடியவர்களான திருஷ்காமினி, கருணா ஜெயின் ஆகியோர் அணியில் உள்ளனர். அனுபவம், திறமை கலந்த அணியாக உள்ளோம். எனவே நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறோம்' என்று கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார். மிதாலி ராஜ் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  மேற்கிந்தியத் தீவுகள் அனுபவம், இளமை என சமபலம் கொண்ட அணியாக உள்ளது. இந்த அணிக்கு மெரிஸாதலைமை வகிக்கிறார். இவர், கடந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி வீராங்கனைக்கான ஐசிசி விருதை வென்றவர். இந்த அணிக்கு சுழற்பந்து வீச்சாளரான அனிஸாமுகமது பெரும் பலமாகத் திகழ்கிறார். உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 14 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அனிஸô, சுழற்பந்து வீச்சுக்கு சாதமான இந்திய மைதானங்களில் எதிரணிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்தியா: மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மான்பிரீத் கெளர் (துணை கேப்டன்), இக்தா பிஸ்த், அமிதா தாஸ், ஜுலான் கோஸ்வாமி, கருணா ஜெயின், ரீமா மல்ஹோத்ரா, மோனா மேஷ்ராம், திருஷ்காமினி, சுலக்சனா நாயக், நிரஞ்சன், ரஸ்னாரா பர்வின், பூனம் ரெüத், சுபலட்சுமி, கெளஹெர் சுல்தானா.

  மேற்கிந்தியத் தீவுகள்: மெரிஸாஅகுய்லெரியா (கேப்டன்), ஸ்டெபானியே டெய்லர் (துணை கேப்டன்), ஷிமெய்னே கேம்பெல், ஷனேல் டேலி, டியேன்டா டாட்டின், கைசோனா நைட், கைஸியா நைட், நடாஷா மெக்லியன், அனிஸாமுகமது, சுப்ரினா மன்றோ, ஜூலியானா நேரோ, ஜூன் ஆக்லே, ஷகுவானா ஹின்டைன், ஷகிரா ஷெல்மான், டிரிமானே ஸ்மார்ட்.

  வாய்ப்பு எப்படி? ஏ பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 3 அணிகளும் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. இலங்கை அணிக்கு அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே.

  பி பிரிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு எளிதாக முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு இடத்துக்கு தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் இடையே கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.

  இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் பலம் வாய்ந்தவையாக உள்ளன. அதனால் கோப்பையை வெல்ல அந்த அணிகளுக்கே அதிக வாய்ப்புள்ளது. நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் கடந்த உலகக் கோப்பையில் விளையாடியவர்களில் 8 பேர் இப்போதைய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

  இங்கிலாந்து கேப்டன் சார்லேட்டே 5-வது உலகக் கோப்பையில் விளையாடுகிறார். அவர் இன்னும் 61 ரன்கள் எடுக்கும்பட்சத்தில் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவரான ஆஸ்திரேலிய வீராங்கனை பெலின்டா கிளார்க்கின் சாதனையை (4,844 ரன்கள்) முறியடித்துவிடுவார்.

  பந்துவீச்சிலும் கேதரின் பிரன்ட், ஹோலி கால்வின் என முன்னணி பெளலர்களை கொண்டுள்ளது இங்கிலாந்து. கேதரின் பிரன்ட், ஒருநாள் போட்டி பௌலர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  8 அணிகள்... இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை தரவரிசை அடிப்படையில் ஏ, பி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணியை எதிர்த்து தலா ஒரு முறை மோதும். அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் "சூப்பர் சிக்ஸ்' சுற்றுக்கு முன்னேறும். லீக் சுற்றில் இரு பிரிவிலும் கடைசி இடத்தைப் பிடிக்கும் அணிகள் 7-வது இடத்துக்கான ஆட்டத்தில் மோதும்.

  சூப்பர் சிக்ஸ் சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். மற்ற 4 அணிகளும் 3 மற்றும் 5-வது இடத்துக்கான பிளே ஆஃப் சுற்றில் விளையாடும். இறுதி ஆட்டம் பிப்ரவரி 14-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. லீக் ஆட்டங்கள் மும்பை, கட்டக் நகரங்களில் நடைபெறுகின்றன.

  முன்னதாக அனைத்து ஆட்டங்களும் மும்பையில் நடைபெறுவதாக இருந்தது. எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் இருவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் கொன்றதையடுத்து பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு எதிர்ப்பு கிளம்பியது. அதன் எதிரொலியாக பாகிஸ்தான் அணி இடம்பெற்றுள்ள பி பிரிவு ஆட்டங்கள் ஒடிசாவின் கட்டக் நகருக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  ஆஸ்திரேலியா 5 முறை சாம்பியன்
  1975-ம் ஆண்டு முதல் இதுவரை 9 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன. முதல் உலகக் கோப்பையை வென்ற பெருமை இங்கிலாந்தைச் சேரும். அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 5 முறையும், இங்கிலாந்து 3 முறையும், நியூஸிலாந்து ஒரு முறையும் வெற்றி கண்டுள்ளன.

  2005-ல் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

  போட்டி நேரம்: மதியம் 2.30

  நேரடி ஒளிபரப்பு:

  இ.எஸ்.பி.என்., ஸ்டார் கிரிக்கெட்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai