சுடச்சுட

  

  திருச்சியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி புதன்கிழமை தொடங்கியது.

  பாரதியார் தின மற்றும் குடியரசு தின மாநில நீச்சல் விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் புதன்கிழமை தொடங்கியது.

  14,17 மற்றும் 19 வயதுக்குள்பட்டோர் பிரிவில் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை திருச்சி  மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் தொடக்கி வைத்தார். 14 வயதுக்குள்பட்டோர் ஆடவர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் சென்னை எஸ்.ஜி. முரளிதரன், தஞ்சாவூர் விஷால் சபரி, மதுரை செல்வ பிரசன்னா ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்தனர். 400 மீட்டர் மெட்லி ரிலே போட்டியில் மதுரை, திருநெல்வேலி, கடலூர் அணிகள் முதல் 3 இடங்களை கைப்பற்றின.

  17 வயதுக்குள்பட்டோர் ஆடவர் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் சென்னை ஆண்ட்ரூ ராஜன், திருச்சி பவித்ரமாணிக்கம், தஞ்சை மதன் ஆகியோர் முதல் 3 இடங்களையும், 100 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில் காஞ்சிபுரம் எஸ். பவன்குப்தா, சென்னை பி. கௌதம், திருநெல்வேலி எஸ். அரவிந்தன் ஆகியோர் முதல் 3 இடங்களையும் கைப்பற்றினர்.

  19 வயதுக்குள்பட்டோர் 50 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் திருநெல்வேலி எமில் ராபின்சிங், சென்னை வி. நரேந்திரன், கன்னியாகுமரி சிக்கந்தர் சாஜன் ஆகியோர் முதல் 3 இடங்களைக் கைப்பற்றினர்.

  14 வயதுக்குள்பட்டோர் மகளிர் 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் காஞ்சிபுரம் பி.எம். அபிசிக்தா, சென்னை சிவானிகுமார், சேலம் அஸ்வின் ரோஸ் ஆகியோரும், 100 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில் சென்னை ஆர்.என். ரூபலதா, திருநெல்வேலி தேவி மகராசி, கோவை ஸ்ரீபூஜா ஆகியோரும் முதல் 3 இடங்களைப் பிடித்தனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மண்டல மேலாளர் ஜி.கே. தாசன் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai