Enable Javscript for better performance
ஆசிய தடகள சங்கத் தலைவர் பதவி: கல்மாடி-ஹாமத் இடையே கடும் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    ஆசிய தடகள சங்கத் தலைவர் பதவி: கல்மாடி-ஹாமத் இடையே கடும் போட்டி

    By dn  |   Published on : 01st July 2013 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிய தடகள சங்கத் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் சுரேஷ் கல்மாடி, கத்தார் தடகள சங்கத் தலைவர் அல் ஹாமத் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    ஆசிய தடகள சங்கத்தின் இரண்டு நாள் மாநாடு புணேவில் திங்கள்கிழமை தொடங்குகிறது.

    இதில் தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2-வது நாளான செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

    3-வது முறையாக ஆசிய தடகள சங்கத் தலைவராக இருக்கும் இந்தியாவின் சுரேஷ் கல்மாடி, 4-வது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

    அவரை எதிர்த்து கத்தார் தடகள சங்கத் தலைவரும், ஆசிய தடகள சங்கத்தின் துணைத் தலைவருமான அல் ஹாமத் போட்டியிடுகிறார்.

    இது தொடர்பாக இந்திய தடகள சம்மேளன நிர்வாகிகள் கூறுகையில், "இருவருக்கும் வெற்றி வாய்ப்பு சமஅளவில் உள்ளது. அதனால் கல்மாடி 4-வது முறையாக வெற்றி பெறுவாரா என்பதை உறுதியாக சொல்ல முடியாது' என்றனர்.

    தில்லி காமன்வெல்த் போட்டி ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சுரேஷ் கல்மாடி, 10 மாத சிறைவாசத்துக்குப் பிறகு, ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai