Enable Javscript for better performance
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், செரீனா- Dinamani

சுடச்சுட

    
    Djokovic

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

    சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் தரவரிசையில் 28-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் ஜெர்மி சார்டியை தோற்கடித்தார்.

    1 மணி நேரம், 26 நிமிடங்களில் சார்டியை வீழ்த்திய ஜோகோவிச், புல்தரை மைதானத்தில் 50-வது வெற்றியைப் பதிவு செய்தார். ஜோகோவிச் 4-வது சுற்றில் ஜெர்மனியின் டாமி ஹேûஸ சந்திக்கிறார். சமீபத்தில் முடிவடைந்த பிரெஞ்சு ஓபன் காலிறுதியில் டாமி ஹேûஸ ஜோகோவிச் வீழ்த்தினார். அதேநேரத்தில் 2009 விம்பிள்டனில் டாமி ஹேஸிடம் ஜோகோவிச் தோல்வி கண்டுள்ளார்.

    செரீனாவுக்கு 600-வது வெற்றி: மகளிர் ஒற்றையர் 3-வது சுற்றில் நடப்புச் சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-0 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கிமிகோ டேட் கிரமை வீழ்த்தினார். கிரம் (42 வயது) இந்தப் போட்டியில் பங்கேற்ற மூத்த வீராங்கனையாவார்.

    இதில் வெற்றி கண்டதன் மூலம் தனது டென்னிஸ் வாழ்க்கையில் 600-வது வெற்றியைப் பதிவு செய்தார் செரீனா வில்லியம்ஸ். விம்பிள்டனில் 5 முறை பட்டம் வென்றவரான செரீனா, அடுத்த சுற்றில் ஜெர்மனியின் சபைன் லிசிக்கியை சந்திக்கிறார். இதில் செரீனா வெற்றிபெறும் பட்சத்தில், தொடர்ச்சியாக 35-வது வெற்றியைப் பதிவு செய்வார். இதன்மூலம் 2000-ல் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் செய்த சாதனையை (35 வெற்றி) செரீனா சமன் செய்வார். இதேபோல் சீனாவின் லீ நாவும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

    டேவிட் ஃபெரர் வெற்றி: கடந்த விம்பிள்டனில் காலிறுதி வரை முன்னேறியவரான ஸ்பெயினின் டேவிட் ஃபெரர், கடும் போராட்டத்துக்குப் பிறகு 6-7, 7-6, 2-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் உக்ரைனின் அலெக்சாண்டரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    உலகின் 4-ம் நிலை வீரரான ஃபெரர், தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 49-ம் நிலை வீரரான குரேஷியாவின் இவான் டோடிக்கை சந்திக்கிறார்.

    பிரபலங்கள்-8: இந்தப் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் தரவரிசையில் முதல் 20 இடங்களில் உள்ளவர்களில் 8 பேர் மட்டுமே தற்போது களத்தில் உள்ளனர்.

    ஆடவர் பிரிவில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 2-ம் நிலை வீரரான பிரிட்டனின் முர்ரே, 4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் டேவிட் ஃபெரர், 7-ம் நிலை வீரரான செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் ஆகிய 4 வீரர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். 3-ம் நிலை வீரரான ஃபெடரர், 5-ம் நிலை வீரரான நடால் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அனைவரும் தோல்வி கண்டு வெளியேறிவிட்டனர்.

    மகளிர் பிரிவைப் பொறுத்தவரையில் முதல் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 4-ம் நிலை வீராங்கனை போலந்தின் அக்னீஸ்கா, 6-வது இடத்தில் உள்ள சீனாவின் லீ நா உள்ளிட்ட 4 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அசெரன்கா, 3-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் மரியா ஷரபோவா உள்ளிட்ட வீராங்கனைகள் ஆரம்பத்திலேயே தோல்வி கண்டு வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    3-வது சுற்றில் சானியா ஜோடி: மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-அமெரிக்காவின் லீùஸல் ஹியூபர் ஜோடி 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி தங்களின் 2-வது சுற்றில் 7-6, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலியின் பிளேவியா பென்னட்டா-ஜெர்மனியின் ஆன்ட்ரியா பெட்கோவிக் ஜோடியை தோற்கடித்தது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை: விம்பிள்டன் போட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாகும். திங்கள்கிழமை முதல் தொடர்ந்து போட்டி நடைபெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai