Enable Javscript for better performance
தேசிய மல்யுத்தம்: தில்லி அணி சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    
    delhiteam

    கன்னியாகுமரியில் நடைபெற்ற தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் தில்லி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேசிய அளவிலான 32-வது ஆடவர் சப்-ஜூனியர் மற்றும் 16-வது மகளிர் சப்-ஜூனியர் மல்யுத்தப் போட்டிகள் நடைபெற்றன.

    இதில் நாடு முழுவதுமிருந்து 28 அணிகளைச் சேர்ந்த 850-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றன. இதில் ஆடவர் பிரிவில் தில்லி அணி முதலிடமும், ஹரியாணா அணி 2-வது இடமும், உத்தரப்பிரதேச அணி 3-வது இடமும் பிடித்தன. மகளிர் பிரிவில் ஹரியாணா அணி முதலிடமும், மகாராஷ்டிர அணி 2-வது இடமும், உத்தரப்பிரதேச அணி 3-வது இடமும் பிடித்தன.

    முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு முறையே தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் வழங்கினார். பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கத் துணைத் தலைவர் ஜே.ஜே.ஆர்.ஜெஸ்டின் தலைமை வகித்தார். பொதுச் செயலர் களரி பி.செல்வராஜ் வரவேற்றார்.

    விழாவில் தேசியப் பள்ளிகள் விளையாட்டுக் கழக கூட்டமைப்புத் தலைவர் சத்பால், தேசிய மல்யுத்த சங்க பொதுச் செயலர் ராஜ்சிங், கன்னியாகுமரி மாவட்ட பொதுச் செயலர் கே.கே.எச்.ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தில்லி அணிக்கு கோப்பையை வழங்குகிறார் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai