Enable Javscript for better performance
பிரிட்டிஷ் கிராண்ட்ப்ரீ: ரோஸ்பெர்க் வெற்றி- Dinamani

சுடச்சுட

    
    rosberg

    ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் பிரிட்டிஷ் கிராண்ட்ப்ரீ போட்டியில் மெர்ஸிடஸ் டிரைவர் நிகோ ரோஸ்பெர்க் வெற்றி பெற்றார்.

    52 சுற்றுகளைக் கொண்ட இப்போட்டியில் 9-வது வரிசையில் இருந்து புறப்பட்ட ரோஸ்பெர்க் 1 மணி நேரம், 32 நிமிடங்கள், 59 விநாடிகள், 456 மைக்ரோ விநாடிகளில் இலக்கை எட்டினார்.

    28 வயதாகும் ரோஸ் பெர்க், இந்த சீசனில் பெற்ற 2-வது வெற்றி இது. ஒட்டுமொத்தத்தில் அவருக்கு இது 3-வது வெற்றியாகும். சில்வர்ஸ்டோன் "சர்க்கியூட்'-ல் 1955-க்குப் பிறகு மெர்ஸிடஸ் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். ரெட் புல் அணியில் மார்க் வெப்பர் (1:33:00.221) 2-வது இடத்தையும், ஃபெராரி டிரைவர் ஃபெர்னாண்டோ அலோன்ஸô (1:33:06.580) 3-வது இடத்தையும் பிடித்தனர். வெப்பருக்கு இது 37-வது வெற்றியாகும். இந்த சீசனில் 5-வது முறையாக முதல் 3 இடங்களுக்குள் வந்துள்ள அலோன்ஸôவுக்கு ஒட்டுமொத்தத்தில் இது 91-வது வெற்றியாகும்.

    டயர் பழுது காரணமாக முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட உள்ளூர் நாயகன் லீவிஸ் ஹாமில்டன் உள்ளிட்ட முன்னணி வீரர்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது.

    3 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான ரெட் புல் டிரைவர் செபாஸ்டியன் வெட்டல், காரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு (கியர் ஃபாக்ஸ் ஃபெய்லியர்) காரணமாக 41-வது சுற்றோடு போட்டியிலிருந்து விலகினார். இந்திய அணியான "ஃபோர்ஸ் இந்தியா'வின் டிரைவர்கள் அட்ரியான் சுதில் 7-வது இடத்தையும், பால் டி ரெஸ்டா 9-வது இடத்தையும் பிடித்தனர்.

    19 சுற்றுகளைக் கொண்ட இந்த சீசனில், இதுவரை 8 சுற்றுகள் முடிந்துள்ளன. அணி பிரிவில் ரெட்புல் அணி 219 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. டிரைவர்கள் வரிசையில் ரெட்புல் அணியின் செபாஸ்டியன் வெட்டல் 132 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai