Enable Javscript for better performance
முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2017-ல் இங்கிலாந்தில் நடக்கிறது- Dinamani

சுடச்சுட

    

    முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2017-ல் இங்கிலாந்தில் நடக்கிறது

    By dn  |   Published on : 01st July 2013 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறுகிறது.

    மினி உலகக் கோப்பை போட்டிக்குப் பதிலாக இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி வருடாந்திரக் கூட்டம் சனிக்கிழமையோடு நிறைவடைந்தது. அதன் முடிவில் இந்த அறிவிப்பு வெளியானது.

    இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் 2017-ம் ஆண்டு ஜூன்-ஜூலை மாதங்களிலும், இரண்டாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களிலும் நடைபெறுகின்றன' என்று குறிப்பிட்டுள்ளது.

    வங்கதேசத்துக்கு கெடு: 2014-ல் ஐசிசி இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது. அதற்காக மைதானங்கள் சீரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அந்தப் பணிகள் அனைத்தையும் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்குமாறு வங்கதேசத்துக்கு கெடு விதித்துள்ளது ஐசிசி.

    பந்தின் தன்மையை மாற்றினால் எதிரணிக்கு 5 ரன்கள்: இதேபோல் போட்டியின்போது பந்துவீசும் அணியினர் பந்தை சேதப்படுத்தியோ, வேறு வகைகளிலோ பந்தின் தன்மையை மாற்றினால், பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும்.

    ஒரு வீரர் பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக எவ்வித ஆதாரமும் இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட அணியின் கேப்டன் எச்சரிக்கப்படுவார்.

    பேட்ஸ்மேன்கள், பந்தை தேவையில்லாமல் மாற்றுமாறு கூறினால், அது தொடர்பாக பீல்டிங் அணியின் கேப்டன் புகார் செய்யலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் வரும் அக்டோபர் முதல் நடைமுறைக்கு வரும்.

    4 ஆண்டுக்கு ஒரு முறை: இனிவரும் காலங்களில் ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியும் 4 ஆண்டுக்கு ஒரு முறையே நடத்தப்படும். தற்போது இருபது ஓவர் உலகக் கோப்பை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதுவும் இனிமேல் 2016-க்குப் பிறகு 4 ஆண்டுக்கு ஒரு முறையே நடைபெறும்.

    இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி 2014-ல் வங்கதேசத்திலும், 2016-ல் இந்தியாவிலும் நடைபெறுகின்றன. அதன்பிறகு 4 ஆண்டுக்கு ஒரு முறை தான் நடத்தப்படும்.

    இந்தியாவில்

    3 உலகக் கோப்பைகள்

    இந்தியாவில் 2016-ம் ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பையும், 2021-ல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியும், 2023-ல் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியும் நடைபெறவுள்ளன.

    இதில் இருபது ஓவர் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்தியாவில் முதல்முறையாகவும், 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் 4-வது முறையாகவும் நடைபெறவுள்ளது.

    இதேபோல் 2019-ல் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியை இங்கிலாந்தும், 2020-ல் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியை ஆஸ்திரேலியாவும் நடத்துகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai