Enable Javscript for better performance
ரோஹித் 60; இந்தியா- 229/7- Dinamani

சுடச்சுட

    

    முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் சேர்த்தது.

    ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் கேப்டன் டுவைன் பிராவோ, தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் அந்த அணி, கிரண் போலார்ட் தலைமையில் களமிறங்கியது.

    டாஸ் வென்ற போலார்ட், இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். ரோஹித் சர்மாவும், ஷிகர் தவனும் இந்தியாவின் இன்னிங்ûஸ தொடங்கினர். ஷிகர் தவன் இரு பவுண்டரிகளுடன் 11 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கோலி ஒரு சிக்ஸருடன் 11 ரன்களில் வீழ்ந்தார்.

    ரோஹித் அரை சதம்: இதையடுத்து ரோஹித்துடன் இணைந்தார் தினேஷ் கார்த்திக். இந்தியாவை சரிவிலிருந்து மீட்கப் போராடிய இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தது. கார்த்திக் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரெய்னா களம்புகுந்தார்.

    மறுமுனையில் நிதானமாக ஆடிய ரோஹித் சர்மா 77 பந்துகளில் அரைசதம் கண்டார். அவர் 89 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 31 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து ரெய்னாவுடன் இணைந்தார் தோனி. இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்ததது.

    ரெய்னா 55 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தோனி (27), ஜடேஜா (15) ஆகியோர் டினோ பெஸ்ட் பந்துவீச்சில் ஸ்டெம்பை பறிகொடுத்தனர். கடைசிக் கட்டத்தில் புவனேஸ்வர் குமார் 5 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 11 ரன்கள் சேர்க்க, இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது.

    மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெமர் ரோச், டினோ பெஸ்ட், டேரன் சமி ஆகியோர் தலா

    2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai